Dr.ஷர்மிகாவுக்கு புதிய உத்தரவு..! சித்த மருத்துவ இயக்குநரகம் அதிரடி..!

மிழக பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு தலைவர் டெய்சி சரணின் மகள் டாக்டர் ஷர்மிகா. ஆயுர்வேதா மருத்துவம் படித்து முடித்துள்ள ஷர்மிகா சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக வீடியோ வெளியிட்டு பிரபலமாகினார்.

 

உடல்நலம் குறித்து தொடர்ந்து சித்த மருத்துவ குறிப்புகளை கூறி வந்த ஷர்மிகா மாட்டிறைச்சியை சாப்பிடக்கூடாது என்று கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார்.மேலும், சித்த மருத்துவக் குறிப்பில் இல்லாதவற்றை பேசி வருவதாக ஷர்மிகா மீது புகார் அளிக்கப்பட்டது.

 

அதன் அடிப்படையில் அவரிடம் விளக்கம் கேட்டு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்தநிலையில், இன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி இயக்குநரகத்தில் சித்த மருத்துவர் ஷர்மிகா விசாரணைக்காக ஆஜரானார்.

 

அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்த ஷர்மிகாவுக்கு இயக்குனரகம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் மீது குவிந்த புகார்களுக்கு, வாய்மொழியாக ஷர்மிகா இன்று விளக்கம் அளித்த நிலையில், வரும் 10ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என சித்த மருத்துவ கல்லூரி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.