--- --:--:-- --

மூளைச் சாவடைந்தவரின் இதயம் குழந்தைக்கு பொருத்தப்பட்டது..!

5

ஆந்திராவில் மூளைச்சாவடைந்தவர் இதயம் விசாகப்பட்டினத்தில் இருந்து திருப்பதிக்கு ஆம்புலன்ஸில் மின்னல் வேகத்தில் பறந்தது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 

விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர்.

 

இதையடுத்து மூளை சாவடைந்தவரின் இதயம் விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விசாகப்பட்டினம் விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக திருப்பதிக்கு இதயம் கொண்டு செல்லப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon