--- --:--:-- --

குற்றப்பத்திரிகை பொது ஆவணம் இல்லை : உச்ச நீதிமன்றம்

6

குற்றப்பத்திரிகை பொது ஆவணம் இல்லை என்று குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கையை பொதுத்தளத்தில் வெளியிடுவது குற்றவியல் சட்ட விதிகளுக்கு முரணானது என்று தெரிவித்துள்ளது.

 

குற்ற பத்திரிகையை பொதுமக்கள் இலவசமாக எடுக்க பொதுநல வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் குற்ற பத்திரிக்கையை பொதுத்தளத்தில் வெளியிடுவது குற்றவியல் நடைமுறை சட்ட விதிகளுக்கு எதிரானது என தெரிவித்துள்ளது.

 

குற்ற பத்திரிக்கை பொது ஆவணம் இல்லை என்றும் அதனை இலவசமாக அணுக எந்த பொது தளத்தையும் வெளியிட முடியாது எனவும் தெரிவித்துள்ளது. குற்றப்பத்திரிக்கையை பொதுத்தளத்தில் வெளியிட்டால் வழக்கில் தொடர்புள்ளவர்கள் அதனை தவறாக பயன்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon