--- --:--:-- --

கல்வி என்பது மனித உரிமை – ஆப்கன் அரசுக்கு யுனெஸ்கோ கண்டனம்..!

7

ஜனவரி 24 ஆம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச கல்வி தினத்தை ஆப்கான் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் அர்ப்பணிக்க போவதாக யுனஸ்கோ அமைப்பா அறிவித்துள்ளது.

 

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அந்நாட்டு பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயில அனுமதி மறுத்து வருகின்றனர்.

 

பெண் கல்வியை தாலிபான்கள் கடுமையாக எதிர்ப்பதால் அங்கு 80 சதவீத சிறுமிகளும் பெண்களும் கல்வியை தொடர முடியாத அவல நிலை நிலவி வருகிறது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வரும் யுனெஸ்கோ அமைப்பு சர்வதேச கல்வித் தினமான ஜனவரி 24ஆம் தேதி பெண்களுக்கு அர்ப்பணிக்க போவதாக அறிவித்துள்ளது.

 

பெண் கல்வியை தடுக்கும் உலகில் எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என்றும் கல்வி கற்பது பெண்களுக்கு உலகளாவிய மனித உரிமை என்றும் யுனெஸ்கோ அமைப்பின் தலைமை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon