--- --:--:-- --

சூரியனில் தோன்றும் கரும்புள்ளிகள்..பூமிக்கு ஆபத்தா..?

6

பூமியில் ஓசோன் படலத்தில் ஓட்டை இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் நம்முடைய கிரகத்தின் மிக முக்கிய நட்சத்திரமான சூரியனில் பூமியை விட நான்கு மடங்கு பெரிய கரும்புள்ளி உள்ளது. அதைப்பற்றி சில தகவல் வெளியாகியுள்ளது.

 

சூரியனை வெறும் கண்களால் பார்த்தால் கூட ஒரு கரும்புள்ளி போன்ற ஒன்றை காண முடியும். இதுவரை காணப்பட்ட கரும்புள்ளியில் இது மிகப்பெரிய கரும்புள்ளி என்று வானியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். உண்மையை சொல்லப்போனால் இந்த கரும்புள்ளி நான்கு பூமியின் அளவு கொண்டது என கூறப்படுகிறது.

 

இப்போது பூமியின் திசை நோக்கி உருவாகியுள்ளது எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பொதுவாக விஞ்ஞானிகள் சூரியன் உருவாகும் இத்தகைய புள்ளிகளை சூரிய புள்ளி என்று அழைக்கின்றனர்.

 

சூரியனில் தோன்றியுள்ள இந்த ராட்சத சூரிய புள்ளி வெடித்தால் அது பூமியை மிகவும் மோசமாக தாக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த வெடிப்பின் மூலம் உருவாகும் சூரிய புயல் மிக வலுவான சூரிய புயலாக உருவாகும் என கவலையில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon