பாஜக ஆட்சியில் நாட்டில் பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பு இல்லை..!
மத்திய பாஜக ஆட்சியில் நாட்டில் பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பு இல்லை என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். அனைத்திந்திய ஜனநாயக மகளிர் அமைப்பின் 13 வது தேசிய மாநாடு கேரளாவில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய கேரள முதலமைச்சர், ஆய்வு பற்றிய நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மையினர் தாக்கப்படுவதாக தெரிவித்தார்.
இந்த தாக்குதல்களை மத்திய அரசு கண்டு கொள்வதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இந்த ஆட்சியில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என முதலமைச்சர் குற்றச்சாட்டியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





