--- --:--:-- --

பொங்கல் பரிசை திமுகவினர் வழங்கியதால் சலசலப்பு..!

5

காஞ்சிபுரம் நியாய விலை கடையில் திமுக வட்ட செயலாளர் பொங்கல் பரிசு வழங்கியதால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகை வழங்கி தொடங்கி வைத்தார்.

 

காஞ்சிபுரம் மாநகராட்சி 10வது வார்டில் கைலாசநாதர் கோயில் அருகே உள்ள நியாய விலை கடையில் திமுக வட்ட செயலாளராக பொங்கல் பரிசு தொகை வழங்கியுள்ளார். அதற்கு பொதுமக்கள் மத்தியிலே எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon