இதனால் தான் இளைஞர்களுக்கு பெண் கிடைக்கவில்லை என காங்கிரஸ் தலைவர் பேட்டி..!
நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருவதால் இளைஞர்களுக்கு பெண் கிடைக்கவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் நாட்டில் வேலை இன்மை பிரச்சினை அதிகரித்துள்ளதால் அது சமூகப் பிரச்சினை உருவாக்கியுள்ளது என்றும், வேலை கிடைக்காததால் பல இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாமல் தவிக்கின்றனர் எனவும் கூறினார்.
மேலும் சமூகங்களுக்கிடையில் பாஜக பிழை உருவாக்குகிறது எனவும் தெரிவித்தவர் நாட்டின் பணவீக்கம் மற்றும் வேலையின்மை போன்று உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை பாஜக திசை திருப்புகிறது என்று குற்றம் சாட்டினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





