--- --:--:-- --

லஞ்சம் கேட்டு மாட்டிக்கொண்ட மின் பொறியாளர்..!

4

கடலூர் திருப்பாதிரி மின்வாரிய அலுவலகத்தில் சசிகுமார் என்பவர் உதவி மின் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் செல்வகுமார் என்பவரின் வீட்டிற்கு மின் இணைப்பின் பெயர் மாற்றத்திற்கு பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

 

இதுகுறித்து செல்வகுமார் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் செல்வகுமாரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து அனுப்பினார். அந்த பணத்தை செல்வகுமார் சசிகுமாரிடம் லஞ்சமாக கொடுத்தார்.

 

அப்பொழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். பின்னர் சசிகுமார் வெட்கப்பட்டு முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon