--- --:--:-- --

நீட் வழக்கில் மாணவர்களை திமுக அரசே ஏமாற்றி வருகிறது : இபிஎஸ்

7

நீட் வழக்கில் மாணவர்களை திமுக அரசு ஏமாற்றி வருவதாக எதிர்கட்சித் தலைவர் பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்த அவர் வெளியிட்ட அறிக்கையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் நீட் வழக்கு விசாரணைக்கு வந்த போது திமுக அரசு வாய்தா கோரியதை தொடர்ந்து இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

 

நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது இந்த வழக்கை நேரில் ஆறு மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என திமுக அரசு கூறியது.

 

எனினும் இந்த கோரிக்கையை நிராகரித்து திமுக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பழனிச்சாமி உண்மையான முகத்தை திமுக அரசு வெளிக்காட்டி உள்ளதாகவும், மாணவர்களை ஏமாற்றி வரும் இந்த அரசு அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon