நட்பை முறித்துக் கொண்டதால் இளம் பெண்ணுக்கு கத்தி குத்து..!
நட்பை முறித்துக் கொண்டதால் இளம்பெண்ணை கத்தியால் பலமுறை குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி ஆதிஷ் நகர் பகுதியில் சுக்விந்தர் என்பவர் உடன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் நட்பாக பழகியுள்ளார்.
பின்னர் குடும்பத்தினர் விரும்பாததால் அவரிடம் இருந்து இளம் பெண் விலகி உள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை பெண்ணை சந்திக்க சென்று கொஞ்ச நேரம் பேச வேண்டி அழைத்து வந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பலமுறை குத்தியுள்ளார்.
இதில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் ஹரியானா மாநிலத்திற்கு தப்பி ஓடிய சுக்விந்தரை காவல்துறையினர் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





