பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்..அதிர்ச்சி வீடியோ..!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் செய்யும் வீடியோ வெளியானதை தொடர்ந்து அது குறித்து வட்டார கல்வி அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலக்கரையில் ஊராட்சி ஒன்று தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 32 மாணவர்கள் பயின்று வரும் இந்த பள்ளியில் கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
கழிப்பறையை தலைமையாசிரியை கீதா சுத்தம் செய்ய கூறியதாக புகார் அளித்திருக்கும் மாணவர்களின் பெற்றோர் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
இதனையடுத்து அந்த பள்ளியில் பவானி, சென்னிமலை மற்றும் பெருந்துறை வட்டார கல்வி அலுவலர்கள் மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை அறிக்கை மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி சந்திராவிடம் வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





