--- --:--:-- --

தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

12

மிழகத்தில் ஆறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஐந்து நாட்களுக்கு தமிழகம் புதுவையில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon