--- --:--:-- --

குஜராத்தில் இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை..!

13

குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் பரப்புரை இன்றுடன் ஓய்வடைகிறது. குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் தேதி, முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் அதற்கான தேர்தல் பரப்புரை நாளை மாலையுடன் முடிவடைகிறது.

 

பாரதிய ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். குஜராத்தில் இதுவரை பாரதிய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் போட்டிருந்தது. இப்பொழுது ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் இறங்கியுள்ளதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon