தாய், தந்தையை கொன்று சமைத்து சாப்பிட்ட கொடூர மகன்..!
கும்பகோணம் அருகே தாய் மற்றும் தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே கோவிந்தராஜ் – லட்சுமி என்ற மூத்த தம்பதிக்கு ராஜேந்திரன் என்ற மகன் உள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்ட ராஜேந்திரன் தனது தாய் மற்றும் தந்தையை கொலை செய்துவிட்டு உடல்களை வீட்டிலேயே வைத்துள்ளார். வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார். அந்த பகுதி வழியே நடந்து சென்றவர்கள் வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாக போலீசருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சென்று பார்த்த போலீசார் அங்கிருந்து ரத்தக்கரை படிந்த கத்தியை கைப்பற்றியதுடன் மனநலம் பாதிக்கப்பட்ட ராஜேந்திரன் கொலை செய்வதாக கூறி அவரையும் கைது செய்தனர். தஞ்சாவூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





