எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டுவதை நிராகரிக்கிறோம் : அண்ணாமலை
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்த கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருப்பது தவறானது என்றும் தெரிவித்தார்.
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டுவதை நிராகரிக்கிறோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். ஒரு ஆணையம் அப்போதைய முதலமைச்சரின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





