--- --:--:-- --

நான்காண்டுகளாக மாமியாரை அடித்து துன்புறுத்தி கண்களை குருடாக்கிய மருமகள்..!

6

கேரளாவில் நான்காண்டுகளாக மாமியாரை அடித்து துன்புறுத்தி கண்களை குருடாக்கிய மருமகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் வசித்து வரும் 35 வயதான பெண் தனது மாமியாரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

 

வயது முதிர்ந்த காலத்தில் மாமியாருக்கு சரியாக உணவு கொடுக்காமல் கைகளால் அடித்து காயப்படுத்திய புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. மாமியாரின் சகோதரர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

 

மருத்துவ பரிசோதனையில் மருமகளின் கொடுமையால் மாமியாரின் கண் பார்வை பறி போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் நான் மாமியாரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த போலீசார் மருமகளை தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon