--- --:--:-- --

இறந்து போன நபர் மீண்டும் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி..!

6

திண்டுக்கல் அருகே இறந்து போனதாகக் கருதப்பட்ட நபர் மீண்டும் உயிருடன் அதிகரித்து வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏஜென்சி சாலையில் கடந்த 17ஆம் தேதி 65 வயது மதிக்கத்தக்க நபர் சாலையில் நிலை தடுமாறி விழுந்து சுயநினைவின்றி இருந்தார்.

 

அவர் குறித்த விவரம் தெரியாததால் சமூக வலைத்தளங்கள் மூலம் காவல்துறையினர் தகவலை வெளியிட்டனர். அவரை பார்த்து சின்னத்தம்பி என்பவர் சுயநினைவின்றி இருப்பவரின் மகன் என தெரிவித்துள்ளார். இதனிடையே அந்த நபர் உயிரிழந்ததால் உடல் ஒப்படைக்கப்பட்டது.

 

இறுதி சடங்குகள் செய்து குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இந்த நிலையில் இறந்ததாக கூறப்பட்ட பழனிசாமி திண்டுக்கல் நகரில் சுற்றித் திரிந்தது கண்டு ஊர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

 

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இறந்து போனவர்சாலையில் சுற்றித் திரிந்த அடையாளம் தெரியாத நபர் எனவும் விபத்தில் காயம் அடைந்ததால் அடையாளம் தெரியாமல் பழனிசாமியின் குடும்பத்தினர் அந்த உடலை வாங்கிச் சென்று அடக்கம் செய்தது தெரியவந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon