தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தை..!
ராஜபாளையம் அருகே தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்.
இந்நிலையில் வீட்டில் மணிகண்டனின் மனைவி துணி காயவைக்க மாடிக்கு சென்று உள்ளார். அப்பொழுது மணிகண்டன் 3 வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





