மீராமிதுனை காணவில்லை என புகார்.!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் அறிமுகமானவர் தான் மீராமிதுன். இவர் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வீடியோ வெளியாகி இவர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டு வெளியே சென்ற இவர் நீதிமன்றம் முன் ஆஜராக கூறியபோது இதுவரை ஆஜராகவில்லை.
போலீசார் தரப்பில் மீராமிதுனை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகின்றனர். இந்த நிலையில் மீராமிதுனை காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர்.
அவரது மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதாகவும் மேலும் அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்த போது அவரது உறவினர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





