செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு..!
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வழக்கமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவென அறை முழுவதும் பரவி பற்றி எரிந்ததால் கரும்புகை சூழ்ந்தது.
ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பெரும் சேதம் ஏற்படுவதற்குள் தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்தால் வார்டு முழுவதும் கரும்புகை பரவி மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் இன்வெர்ட்டரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





