கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொடுக்க வற்புறுத்தி ரகளையில் ஈடுபட்ட இளைஞர்..!
கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொடுக்க வற்புறுத்தி வீடு புகுந்து ரகளை செய்த நபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சூளைமேடு பகுதியில் வசிக்கும் ரஷீத் அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவியை காதலிப்பதாக வற்புறுத்திய நிலையில் அந்தப் பெண் மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரஷீத் நேற்று கஞ்சா போதையில் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து பெண்ணின் கையை பிடித்து இழுத்து ரகளை செய்துள்ளார்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்ததையடுத்து பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





