--- --:--:-- --

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு..!

6

மிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

 

கேரளா மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சியில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர்,திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon