--- --:--:-- --

முலாயம்சிங் யாதவின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்..!

7

மாஜ்வாதி கட்சி நிறுவனரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான முலாயம்சிங் யாதவின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. உடல்நலக்குறைவால் காலமான முலாயம்சிங் யாதவின் உடல் அவரது சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

 

அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார். அவரது இறுதி சடங்கில் திமுக சார்பில் மக்களவை குழு தலைவர் டி ஆர் பாலு, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

 

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon