--- --:--:-- --

திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு அதிரடி உத்தரவு..!

5

திரைப்பட விளம்பரங்களில் சான்றிதழ்கள் வகை குறிப்பிடுவது கட்டாயம் என்று தயாரிப்பாளர்களுக்கு மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியம் உத்தரவிட்டுள்ளது. மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியம் அனைத்து திரைப்படங்களும் தணிக்கை சான்றிதழ் வழங்கி வருகிறது.

 

18 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற்றோரின் அனுமதியுடன் பார்ப்பதற்கான யுஏ சான்றிதழ் வழங்கப்படுகிறது. அனைவரும் பார்க்கக்கூடிய படங்களுக்கு யு சான்றிதழ் வழங்கப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்க படங்களுக்கு ஏ சான்றிதழ் வழங்கப்படுகிறது.

 

திரைப்படங்கள் குறித்த விளம்பரங்களை வெளியிடும் பொழுது இது எந்த வகையை சார்ந்தது என்பது கட்டாயம் குறிப்பிட வேண்டுமென்று திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon