--- --:--:-- --

காதல் மனைவியை கடத்தி விட்டதாக கணவர் அளித்த புகார்..!

4

காதல் மனைவியை கடத்தி விட்டதாக கணவர் அளித்த புகாரின் பேரில் பெண்ணின் தாயார் உள்ளிட்ட 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சங்கரன் கோவிலை சேர்ந்த சங்கர் முருகன் திருப்பூர் பனியன் கம்பெனியில் பணிபுரிந்த கோமதியை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி சங்கரன்கோவில் அழைத்து வந்து கடந்த 22ஆம் தேதி திருமணம் செய்தார்.

 

இந்த நிலையில் தனது மனைவியை காணவில்லை என்றும் அவருடைய உறவினர்கள் கடத்தி சென்றுவிட்டதாகவும் சங்கர் முருகன் அளித்த புகாரின் பேரில் கோமதியின் தாயார் மற்றும் உறவினர்கள் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon