கூடுதலாக பானிபூரி தரமறுத்த உத்தரப் பிரதேச இளைஞருக்கு கத்தி குத்து..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கூடுதலாக பானிபூரி தரமறுத்த உத்தரப் பிரதேச இளைஞர் கத்தியால் குத்திய ஒடிசா மாநில இளைஞர் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ராகுல் பானிபூரி கடை நடத்தி வருகிறார்.
ஒரிசா மாநில இளைஞர் பானிபூரி சாப்பிட்டுவிட்டு கூடுதலாக இன்னொரு பானி பூரி கேட்டுள்ளார். ரகுல் சிங் தர மறுத்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார்.
காயங்களுடன் அந்த இளைஞர்கள் விரட்டிச் சென்று தாக்கினர். இருப்பினும் அந்த இளைஞர் தப்பி சென்றுவிட்டார். காயமடைந்தவர்கள் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி உடனடியாக கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





