--- --:--:-- --

பிரசவத்துக்கு பின் எடையை குறைத்து ஸ்லிம்மான காஜல்..!

5

காஜல் அகர்வால் மும்பை ஏர்போர்ட் வந்த வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.நடிகை காஜல் அகர்வால் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நேரத்திலேயே திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தையும் பிறந்திருக்கிறது. மகனுக்கு அவர் நீல் கிச்லு என பெயர் சூட்டி இருக்கிறார்.

 

குழந்தை, குடும்பம் என செட்டில் ஆகிவிட்டதால் காஜல் இந்தியன் 2 படத்தில் தொடர்ந்து நடிக்க மாட்டார் என முன்பு தகவல் பரவியது. ஆனால் அது உண்மை இல்லை, நான் தொடர்ந்து ஷூட்டிங்கில் பங்கேற்கிறேன் என காஜல் தெரிவித்து இருந்தார்.

 

இந்தியன் 2 பட ஷூட்டிங் சென்னையில் நடைபெற இருக்கும் நிலையில் அதில் பங்கேற்க காஜல் மும்பையில் இருந்து கிளம்பி இருக்கிறார். அவர் இந்த படத்திற்காக பிரசவத்திற்கு பின் உடல் எடையையும் குறைத்து இருக்கிறார்.ஏர்போர்டில் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon