பச்சை குத்திக் கொண்ட இருவருக்கு எச்ஐவி உறுதி செய்யப்பட்டுள்ளது..!
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் எச்ஐவி தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பச்சை குத்த பயன்படுத்திய ஊசி மூலம் பச்சை குத்திக் கொண்ட இருவருக்கு எச்ஐவி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு பச்சை குத்திக்கொண்ட 20 வயதுடைய இளைஞனுக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்பட்டுள்ளது. அனைத்து விதமான பரிசோதனைக்கு பிறகு இளைஞரின் உடலில் ஏற்பட்ட பாதிப்பை மருத்துவர்கள் கண்டறிய முடியவில்லை.
இறுதியில் எச்ஐவி பரிசோதனை செய்த பிறகு அவருக்கு நோய் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இதேபோல் பச்சை குத்திக் கொண்ட பெண் ஒருவருக்கும் எச்ஐவி கண்டறியப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





