குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட பிரச்சனையை தடுக்க சென்ற நபர் அடித்து கொலை..!
தேனி அருகே குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட பிரச்சனையை தடுக்க சென்ற நபரை அடித்து கொன்றதாக கூறப்படும் சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராதாகிருஷ்ணன் நேற்று மதுபோதையில் வந்த நிலையில் குப்பை கொட்டும் பிரச்சனையில் ஊர்க்காவலர் என்பவரின் சமூகத்தைப் பற்றி தவறாக பேசியதாக கூறப்படுகிறது.
ஊர் காவலன் உறவினன் மகேஷ்வர குமார தனிப்பட்ட பிரச்சினைக்காக எதிர்த்து தனது சமூகத்தை இழிவாகப் பேசுகிறார் என கேள்வி எழுப்பியதால் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன் அவர் மீது கல்லை தூக்கி எறிந்ததோடு தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.
படுகாயமடைந்த மூவரில் மகேஸ்வர குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததை அடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார் ராதாகிருஷ்ணன் உட்பட 5 பேரை கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





