--- --:--:-- --

மீண்டும் சீரியல்களில் நடிக்கப்போவது எப்போது..?

11.1

சின்னத்திரையில் டாப் நடிகைகளின் லிஸ்ட் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் கண்டிப்பாக இவர் டாப் 10ல் ஆவது வந்துவிடுவார் என்றால் அது நடிகை ஆல்யா மானசா தான்.இவர் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் தான் சினிமா பக்கம் வந்துள்ளார்.

 

அதில் கிடைத்த பிரபலம் அப்படியே விஜய் டிவி பக்கம் ராஜா ராணி என்ற தொடர் மூலம் நாயகியானார். அதில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் சஞ்சீவுடன் காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்தனர்.

 

முதலில் ஐலா என்ற பெண் குழந்தை பிறந்தார். முதல் பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைத்து நடிக்க வந்த ஆல்யா மானசா ராஜா ராணி 2 தொடரில் நடித்து வந்தார்.

 

பிரசவ நேரத்தில் சீரியலில் இருந்து விலகிய அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஆல்யா மானசாவிடம் ஒரு ரசிகர் சீரியல்களில் எப்போது நடிக்க வருவீர்கள் என கேட்டுள்ளார்.

 

அதற்கு அவர், பிரசவத்திற்கு பிறகு உடல் எடை ஏறி விட்டது. அதை குறைத்துக் கொண்டு தான் நடிக்க ஆரம்பிக்க வேண்டும் என பதில் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon