சுகாதாரமற்ற படுக்கையில் டீனை படுக்க வைத்த அமைச்சர்..!
பஞ்சாபில் அரசு மருத்துவமனையில் சுகாதாரமற்ற படுக்கையில் மருத்துவமனை முதல்வரை கட்டாயப்படுத்திய அமைச்சருக்கு கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன. பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது படுக்கைகள் சுத்தமாக இல்லை எனக்கூறி அமைச்சர் அருகில் இருந்த மருத்துவமனையில் முதல்வரை அழைத்து நோயாளிக்கான படுக்கையில் படுக்குமாறு உத்தரவிட்டார். வேறு வழியின்றி அதில் டீன் படுத்திருந்த காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து அமைச்சரின் செயலுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் பதிவாகி வருகின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




