ராஜஸ்தான் மாநிலத்தில் விபத்துக்குள்ளான போர் விமானம்..!
ராஜஸ்தான் மாநிலத்தில் மிக் 21 ரகப்போர் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிர் இழந்தனர். பார்கம் மாவட்டத்தில் மிக் 21 ரகப்போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிய துவங்கியது. பற்றிய விமானம் முழுவதும் பரவியதால் இரண்டு விமானிகளும் உடல் கருகி உயிரிழந்தனர். இதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயிரிழந்த விமானிகளின் சேவை என்றும் நினைவில் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்களின் குடும்பத்தினருக்கு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




