மதுரைக்காரர் என்று சொன்னாலே சென்னையில் பயப்படுவார்கள்.. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி மதுரையில் பட்டமளிப்பு விழாவில் கலகலப்பு..!
மதுரை, மீனாட்சி செவிலியர் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழாவில் 28 மாணவிகள் பட்டம் பெற்றனர். காவல்துறையின் முன்னாள் கூடுதல் தலைமை இயக்குனர் – தலைமையகம், திரு. M. ரவி ஐபிஎஸ், பட்டமளிப்பு விழா சிறப்புரையை ஆற்றினார்.
மதுரையில் மீனாட்சி செவிலியர் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (MMHRC) ஒரு அங்கமான இக்கல்லூரி, செவிலியப் பணிக்காக திறன்வாய்ந்த மாணவர்களை உருவாக்கும் தமிழ்நாட்டின் கௌரவம்மிக்க செவிலிய கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகும்.
நான்கு ஆண்டுகால பிஎஸ்சி நர்சிங் (செவிலியப் பணி) கல்வித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கின்ற 28 மாணவிகளுக்கு இளங்கலை பட்டப்படிப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவர்களுள் முதன்மையான மூன்று மாணவிகளுக்கு, ரூ.1,75,000/- ரொக்கப் பரிசுகளோடு சேர்த்து கல்வியில் சிறப்பான செயல்பாட்டிற்காக சின்னம்மாள் கல்விச்செல்வம் விருதையும் பெற்றனர்.

காவல்துறையின் முன்னாள் கூடுதல் தலைமை இயக்குனர் – தலைமையகம், திரு. M. ரவி ஐபிஎஸ் (ஓய்வு), இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக பங்கேற்றார். மேலும், பட்டமளிப்பு விழா சிறப்புரையை அவர் வழங்கினார்.
இந்நிகழ்வில், மதுரை, MMHRC – ன் தலைவர் டாக்டர். S. குருசங்கர் மற்றும் திருமதி. காமினி குருசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தார். மாணவர்களும் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் இவ்விழா நிகழ்வில் திரளாக கலந்து கொண்டனர். மாணவர்கள் நிகழ்த்திய பல கலை நிகழ்ச்சிகள் அவர்களது திறன்களை நேர்த்தியாக வெளிப்படுத்தியதோடு, பார்வையாளர்களின் வரவேற்பையும் பெற்றது.
மீனாட்சி செவிலியர் கல்லூரி, 2017-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. தமிழ்நாடு டாக்டர். எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இது எஸ்ஆர் டிரஸ்டால் இணைக்கப்படுகிறது. இந்திய நர்சிங் கவுன்சில் (புதுடெல்லி) மற்றும் தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் பேறுகால உதவியாளர்கள் கவுன்சில் ஆகிய அமைப்புகளின் அங்கீகாரத்தையும் இக்கல்லூரி பெற்றிருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




