ஸ்டாலினுக்கு அமைச்சர் சம்பத்குமார் கண்டன அறிக்கை..!
த.வெ.க. வேட்பாளர் குறித்து மு.க.ஸ்டாலின் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெண்களை இழிவுபடுத்திப் பேசும் திமுக எனும் ஆபாச நதியின் பிறப்பிடமே!! உங்கள் தரக்குறைவான பேச்சுகள், உங்கள் அரசியல் பண்பாட்டின் அவலட்சணத்தை அம்பலப்படுத்துகின்றது.
பெண்களை அவமதிப்பதையே தொழிலாகக் கொண்ட உங்களுக்கு வெட்கமும், நாவடக்கமும் இல்லையா? தமிழகத் தாய்மார்கள் உங்கள் ஆணவத்தையும், அருவருப்பான பேச்சுகளையும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
இந்த இடைத்தேர்தலில் உங்கள் அகந்தைக்கு விழும் அடி, பெண்களை இழிவுபடுத்தும் ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத பாடமாக இருக்கும்! உங்கள் அநாகரிகப் பேச்சுக்கு, தமிழகப் பெண்களிடம் பகிரங்கமாகவும் நிபந்தனையின்றியும் மன்னிப்பு கேளுங்கள். சாக்குப்போக்கு சொல்லி ஒளிந்துகொள்ளாமல், தவறை ஒப்புக்கொள்ளும் நேர்மையாவது உங்களுக்கு இருக்கட்டும்.” இவ்வாறு சம்பத்குமார் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




