--- --:--:-- --

தமிழ்நாட்டில் இன்று மழை வெளுக்கும்!

2

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கேரளம் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

 

 

இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

மேலும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் எனவும், சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது.

அதேநேரம், நீலகிரி, கோவை மாவட்டங்களில் வரும் 6ஆம் தேதி வரை கனமழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon