மதுரை மாநகராட்சி அண்ணாமாளிகையை முற்றுகை போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை
மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்களான 1) பணியாளர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்து PF, LIC, சொசைட்டி நிலுவை தொகையை அந்தந்த பிரதி அந்தந்தமாதத்திற்குள் வழங்கு
2) ஒய்வு பெரும் நாளிலேயே அனைந்து ஒய்வு ஊதிய பணபலன்கள் அன்றே வழங்கு.
3) தேர்ச்சி திறனற்ற பணியாளர்களின் குடியிருப்பு முகவரி அறிந்து அந்தந்த மண்டலத்திலே பணி அமர்த்த வேண்டும்.
4) பத்தாம்(10) வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை தாய்மை பணி மேற்பார்வையாளர் அல்லது அலுவலக உதவியாளர் (GA)பணி உயர்வு வழங்கு.
5) OHT ஆப்ரேட்டர் பணியாளர்களுக்கு அரசு ஆவன எண்: 62ன் படி ஊதியத்தை வழங்கிடு உரிய EPF மற்றும் ESI பிடித்தம் செய் .
6) கொரோனா கால கட்டத்தில் பணியாற்றிய அனைத்து துறை வாரியானமுன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத் தெயருை.13.000 பெற்று நீர்வாகம் வழங்கு.

7) வார்டு உதவி/இளநிலை பொறியாளர்களிடம் பணிபுரியும் திறன் 1பணியாளர்களுக்குசமஉரிமை, சம வேலை வழங்கு.
8) பொறியியல் பிரிவில் கடந்த 24 ஆண்டுகள் பணியாற்றிய BE., மற்றும் டிப்ளமோ படித்த பணியாளர்களுக்கு இளநிலை பொறியாளர் பதவி உயர்வு வழங்கு.
9) மக்களுக்கு சிறப்பாக பணியாற்றி வந்த தெருவிளக்கு மின் பிரிவை தனியாருக்கு வழங்கிய ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்.
10) Training படித்து 8 வருடங்கள் முடிந்த பணியாளர்களுக்கு பகுதி சுகாதார செவிளியர் பதவி உயர்வு வழங்கு,
11) பொறியியல் பிரிவில் பணியாற்றும் தினக்கூலி குடிநீர் / பாதாள சாக்கடை / பார்க் மஸ்தூர்,பம்பிங் ஸ்டேசன் / பிட்டர் கூலி / டிரைவர்கள் / தெருவிளக்கு பணியாளர்களுக்கு அரசாணை எண் 62 (D) ன் படி சம்பள ஊதியத்தை வழங்கு.
12) நகர சுகாதார செவிலியர்களுக்கு ஆண்டு தோறும் சீருடைப்படி வழங்க கோரி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி மண்டலம் 2ல் முன்பாக பெருந்திரளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் சின்னச்சாமி, முன்னிலை செல்வகுமார், ஜெகதீஷ்,பாண்டி, பொறியியல்பிரிவு தலைவர் மகுடீஸ்வரன், பொறியியல் பிரிவு பொருளாளர் துரைக்கண்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் நீதிராஜா உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




