--- --:--:-- --

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று..!

1

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடற்சோர்வு ஏற்பட்டதையடுத்து நடைபெற்ற பரிசோதனையில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரு தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து வீட்டு தனிமையில் இருப்பதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தகவலை தெரிவித்துள்ளார். அனைவரும் முகக் கவசம் அணிவது, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon