சுற்றுலா தளமாக மாறிய அதிபர் மாளிகை..!
இலங்கையில் கோத்தாபய ராஜபக்சவும், ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகும் வரை அதிபர் மாளிகையை விட்டு வெளியேற மாட்டோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். மூன்றாம் தேதி பதவி விலகப் போவதாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புதிய அரசு பதவி ஏற்றதும் பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். ஏற்கனவே அமைச்சர்கள் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் அனைத்து கட்சிகளை உள்ளடக்கிய இடைக்கால அரசை அமைப்பது குறித்து எதிர்க்கட்சிகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
இது ஒருபுறமிருக்க பலத்த பாதுகாப்பு கொண்ட இலங்கை அதிபரின் மாளிகை இப்பொழுது மக்களின் சுற்றுலா தளமாக மாறியுள்ளது. மக்கள் குடும்பம் குடும்பமாக திரண்டு வந்து அதிபர் மாளிகையில் தங்கள் பொழுதை கழிப்பது தொடர்கிறது.
கோத்தபாய ராஜபக்சவும் இந்த ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகும் வரை அதிபர் மற்றும் பிரதமர் மாளிகையை விட்டு மக்கள் விலக மாட்டார்கள் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




