திடீரென எழுந்த பயங்கர சத்தம்… விமானம் கீழே விழுந்ததா?
கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் ராணுவ பயிற்சி விமானங்கள் தாழ்வாக பறந்து செல்லும் சத்தம் கேட்டதால் விமானம் கீழே விழுந்ததாக வதந்தி பரவி பொது மக்கள் ஒன்று திரண்டனர்.
முல்லையூர் வஞ்சினபுரம் பகுதிகளில் விமானத்தை தேடும் பணி நடைபெறுவதாக வதந்தி பரவியுள்ளது. இதனால் கடலூர், அரியலூர் மாவட்ட எல்லைகளில் பதற்றம் நிலவி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





