வாயில் கத்தியுடன் வீடியோ பதிவிட்ட மாணவர்களை பிடித்த போலீஸ்.!
சென்னையில் நின்று கொண்டிருந்த ரயிலில் இருந்து இறங்கிய இளைஞர் கத்தியை வைத்து நடந்து வந்த படி வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். நான்கு பள்ளி மாணவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கீழ்பாக்கம் சாஸ்திரி நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் இருந்து மாணவர்கள் இறங்குவது போலவும் இறங்கியதும் மற்ற மாணவர்களில் ஒருவர் கத்தியை அவனிடம் கொடுப்பது போலவும் அதை வாயில் வைத்தபடி நடப்பது போலவும் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ வேகமாக பரவிய நிலையில் சம்பந்தப்பட்ட 4 மாணவர்களையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





