--- --:--:-- --

5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!

6

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகளில் வளர்ச்சி மற்றும் வெப்பச்சலனம் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் தென் தமிழகம் மற்றும் வட தமிழக மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை தமிழக கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon