--- --:--:-- --

கார் விபத்தில் சிக்கிய பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு..!

2

மெரிக்காவின் லாஷ் ஏஞ்சல்ஸ் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் சாலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சென்ற காரும், மற்றொரு காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

 

இதனால் பின்னால் வந்த நான்கு கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து மோதிய நிலையில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பயணம் செய்த அந்தக் கார் ஒரு சிறிய கார் மீது மோதி மேலே ஏறி நின்றது. சீட்பெல்ட் அணிந்திருந்ததால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

 

இந்த விபத்தில் பெண் ஒருவருக்கு மட்டும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணை நேரில் சென்று அர்னால்டு சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon