புதிதாக வைரலாகும் தங்க ஐஸ்கிரீம்..!
தங்க ஐஸ்கிரீம் சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எப்பொழுதும் விரும்பி சுவைக்கும் பண்டங்களில் முதலிடம் பெறுவது ஐஸ்கிரீம் என்றால் மிகையல்ல.
சுவையும் மகிழ்ச்சியும் ஒரே சமயத்தில் தரும் அற்புதமான உணவுப் பண்டம் ஐஸ்கிரீம். அமெரிக்க காரர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை ஐஸ்கிரீம் தினமாக கொண்டாடுகிறார்கள்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள உயர் பேக்கரியில் தயாரிக்கப்பட்டுள்ள ஐஸ்கிரீம் அனைவரையும் மயங்க வைத்து விட்டது.
அந்த கோனில் முதலில் ஐஸ்கிரீம் நிரப்பப்படுகிறது. பிறகு அதன் மீது தங்க லேயர் வைக்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





