சென்னையில் கொரோனா தொற்று சற்று அதிகரிப்பு..!
உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் மற்றும் டெல்டா வைரஸ்களை விட இரட்டிப்பாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வைரஸ்களின் உருமாற்றம் இயல்பானதாக கருதப்பட்டாலும், உருமாற்றம் அடைந்து வரும் கொரொனா வைரஸ்களை தடுப்பூசிகள் எதிர்கொள்ளு மா என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் மருத்துவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது அச்சுறுத்தி வரும் கொரொனா வைரஸ்களை காட்டிலும் பரவல் விகிதம் விரைவாக இரட்டிப்பாகும் என தகவல் வெளியானது.
பீட்டா வகை பாதிப்பு 7நாட்களில் இரட்டிப்பான சூழலில், டெல்டா வகை பாதிப்புகள் ஐந்து நாட்களில் இரட்டிப்பதாகவும், தற்போது ஓமிக்ரான் வகை பாதிப்புகள் இரண்டு நாட்களுக்குள் இரட்டிப்பதாகவும் மருத்துவ வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
நோய் பாதிப்பு தீவிரமாக உள்ள 11 நாடுகளின் தரவுகள் படி இரண்டு தடுப்பூசி செலுத்தியிருந்தால் மற்றும் விகிதம் குறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.






