அதிவேகத்தில் பரவுகிறதா ஓமிக்ரான் வைரஸ்..!
தமிழ் நாட்டில் தற்பொழுது 7,883 பேர் கொரொனாவுக்கு மருத்துவம் பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரொனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று முதன்முறையாக 800க்கும் கீழ் பாதிப்பு பதிவாகியுள்ளது.
மக்கள் நல்வாழ்வு துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் நேற்று ஒரு நாளில் 698 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரொனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 33 ஆயிரத்து 346 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 7,883 பேர் மருத்துவம் பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது. வைரஸ் தொற்றால் நேற்று ஒரே நாளில் 746 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரொனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 88 ஆயிரத்து 888 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் வைரஸ் தொற்றுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




