--- --:--:-- --

பல மாதங்களாக இரண்டு சடலம் இருப்பதை மறந்து போன மருத்துவமனை..!

10

பெங்களூருவில் இ‌எஸ்‌ஐ மருத்துவமனை சவக்கிடங்கில் சோதனை செய்தபோது 15 மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் உயிரிழந்தோரின் சடலங்கள் மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த 2020 ஜூலை மாதம் கொரொனாவின் முதல் அலையின் போது சாம்ராஜ் பகுதியை சேர்ந்த துர்கா மற்றும் முனிராஜ் என இரண்டு பேரும் கொரொனா தொற்றால் இ‌எஸ்‌ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

அவர்கள் அங்குள்ள பழைய சவ கிடங்கில் வைக்கப்பட்டது. இதன் பின்னர் அங்கு சவம் இருப்பதையே மறந்து போனதாக தெரிகிறது. இந்த சூழலில் சுத்தம் செய்த போது தான் இரு சடலம் கிடந்தது தெரிய வந்தது. மருத்துவமனை தரப்பு அதிர்ச்சி அடைந்தது. இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon