--- --:--:-- --

மழை பாதித்த இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!

9

ன மழையால் பாதிக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வு செய்தார். தமிழகத்தில் பரவலாக மழை நீடித்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்திருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

 

தண்ணீரை வெளியேற்றும் பணி மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் தாம்பரம் அருகே முடிச்சூர் வரதராஜபுரம் பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு நடத்தினார். பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

 

தண்ணீர் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டுமென முதலமைச்சரிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon