--- --:--:-- --

கிணற்றில் இருந்து 25 அடி உயரத்துக்கு மேல் எழுந்த உறைகிணறு..!

3

திருப்பதியில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஒரு வீட்டில் இருந்த கிணற்றில் பதிக்கப்பட்டிருந்த உறைகிணறு 25 அடி உயரத்திற்கு மேல் எழுந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்பதியில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக தற்போது சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் ஸ்ரீ கிருஷ்ணா நகர் பகுதியில் சுமார் 20 அடி ஆழத்தில் பதிக்கப்பட்டுள்ள உறைகிணறு திடீரென மேலெழுந்த நிகழ்வு நடைபெற்றது.

 

அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு சென்று ஆச்சரியத்துடன் கீழிருந்து மேல் எழுந்து நின்று உறைகிணறைபார்வையிட்டனர். இது குறித்து சிலரிடம் பேசிய எம்எல்ஏ இந்த பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சிற்றோடை ஒன்று ஓடிக்கொண்டிருந்தது எனவும் அதன் மீது தற்போது சிற்றோடை உயிரோட்டத்துடன் உள்ளது எனவும் கூறினார்.

 

அண்மையில் பெய்த கனமழை காரணமாக பூமிக்கு உந்து விசையால் மேல் எழுந்துள்ளது எனவும் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon