--- --:--:-- --

அம்மா உணவகம் என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் விதமாக கலைஞர் உணவகம் அமைப்பதா? – ஓ.பன்னீர்செல்வம்

4

அம்மா உணவகம் என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் விதமாக கலைஞர் உணவகம் அமைப்பதா என தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார் .

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அம்மா உணவகம் என்ற நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை அந்த பெயரிலேயே விரிவுப்படுத்த கலைஞர் உணவகம் என பெயர் வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என குறிப்பிட்டுள்ளார்.

 

புதிதாக கட்டப்படும் திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதில் அதிமுகவிற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் நடைமுறையில் இருக்கும் ஒரு திட்டத்தை செயல்படுத்துவது என்பது இதுவரை நடைமுறையில் இல்லாத ஒரு வினோதமான கூற்று என தெரிவித்துள்ளார்.

 

புதிதாக எத்தனை உணவகங்கள் அமைந்தாலும் அவை அம்மா உணவகம் என்ற பெயரிலேயே செயல்பட முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon